Sunday, March 14, 2010

சம்மாந்துறையின் இலக்கிய விலாசங்கள்.

சம்மாந்துறையின் சமூக, அரசியல், பொருளாதார, இலக்கிய , கலை, விளையாட்டு அம்சங்கள் பற்றி எழுத வரும்போது அதன் சாதனையாளர்கள் குறித்து விரிவாக குறிப்பிட வேண்டி உள்ளது. ஆனால் இதற்கென தனியான ஒரு நூலின் உருவாக்கம் அவசியமாகும். இது தொடர்பான நூலொன்றின் அல்லது இக் கட்டுரையின் அவசியத்தை உணர்த்துவதற்கு சில உதாரணங்களை முன்வைக்கமுடியும்.

உலகளாவிய அளவில் ; விளையாட்டுச் சாதனைபுரிந்த ‘இலங்கைச் சம்பியன் சரீப்’ சம்மாந்துறையைச் சார்ந்தவர். தேசிய அளவில் இலங்கை முஸ்லிம்களை ஒன்றுபடுத்திய கவிஞர் திலகம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் இவ்வூரைச்சேர்ந்தவர். உச்ச நீதிமன்ற நீதியரசர், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பதிவாளர் முதலான பதவிகளை வகித்தவர்களும் சம்மாந்துறைக்குப் புகழ்சேர்த்தவர்களே. அதே போல் சமாதானத்திற்காகப் பணியாற்றியவர்கள் என்ற வகையில் உலகளாவிய ரீதியில் கௌரவிக்கப்பட்ட கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலும், கலாநிதி ஐ.எம்.இப்றாகிமும் இந்த மண்ணின் புதல்வர்களே. அரசியல் வரலாறு படைத்த மக்கள் பிரதிநிதிகளும் இம் மண்ணின் வரலாற்றுக்குச் சொந்தமானவர்களே.

இவ்வகையிலே சம்மாந்துறையின் இலக்கியப் பாரம்பரியத்திற்கும் ஒரு நீண்ட வரலாறுண்டு. வாய் மொழி இலக்கிய வளர்ச்சியிலிருந்து அவ் வரலாறு ஆரம்பமாகிறது. செந்நெறி இலக்கிய மரபில் முதலில் அறியப்பட்டவராக இஸ்மாலெவ்வைப் புலவரைக் குறிப்பிடமுடியும். அவருக்குப் பின் நன்கு அறியப்பட்டவர்களுள் ஈழமேகம் முக்கியமானவர். ஈழமேகம் பற்றித் தனியான ஒரு நூலே வெளிவந்துள்ளது. அதே போல் இவ் வரலாற்றைப் பற்றி அறிவதற்கு தென் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்கள் செய்த ஆய்வேடுகளும் சில உள.

இருப்பினும் இந்த வரலாற்றுத் தேடலைச் செய்யும்போது ஈழத்து இலக்கியத்தோடு தொடர்புபடுத்தி சில விடயங்களைத் தெளிவாய் முன்வைக்கமுடியும். உலக கவிதைப் போட்டிகளில் பரிசுபெற்ற கலாபூஷணம், கலைமணி ஏ.ஸீ.இஸ்மாலெவ்வை, தி.மு.க. பிரச்சாரத்தினால் மிகவுமே ஈர்க்கப்பட்ட மாறன் யு.செயின் “அழகான ஒரு கோடிக் கண்கள்” என்ற வானொலி மெல்லிசைப் பாடல் மூலம் நன்கு அறியப்பட்ட பாவலர் பஸீல் காரியப்பர், தற்கால பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதிவரும் இறையருள் கவிஞர் ஏ.இப்றாகிம், சம்மாந்துறை அஸீஸ் , தினகரன் இஸ்மாயில் போன்றவர்களும் முதல் சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற அஸாருதீன் வரை நீண்டு செல்லும் நமது கவிதைப் பாரம்பரியம் தனித்துவமாய் பேசப்படவேண்டியது. ஈழத்துக் கவிதை மரபில் 1950,60களில் வெளிவந்த மாறன் யூ.செயினினதும், பஸீல் காரியப்பரினதும் கவிதைகளைத் தனியாக நோக்கமுடியும். இசையோட்டம், சொல்லாட்சி, கவித்துவச்சிறப்பு முதலானவற்றால் அவ்வேறுபாடு தெற்றனத்தெரியும். இதுபோல் அண்மைக்கால வரலாற்றில் சாகித்திய மண்டலப் பரிசு பெறத்தக்க அளவு அஸாருதீனின் கவிதைப்பாணி ஈழத்துக் கவிதை மரபில் தனியாய் நிற்கின்றதுதானே. பரீதா இஸ்மாயில், மசூறா ஏ.மஜீட், போன்றவர்கள் முதல் றபீக்கா வரை எழுதும் நமது பெண்கவிஞர்களின் பாரம்பரியமும் குறிப்பிடத்தக்கது. ஈழத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் வெளிவரும் பெண்களின் கவிதைத் தொகுப்புக்களில் மசூறாவின் கவிதைகளும் உள்ளடங்குகின்றன. இப்படியான தனித்துவமான பெண் கவிதைப் பாரம்பரியம் ஒன்றும் எமக்குள் இருக்கின்றது என்பது மறுதலிக்கத்தக்கதல்ல.

இதே போல் ஈழத்துப் புனை கதை மரபில் எம்.பி.எம்.ஜலீல் அவர்கள் எழுதிய “ஒரு வெள்ளைப் பூ சிரிக்கின்றது”, “சரித்திரம் தொடர்கிறது” என்ற இரு நாவல்களும் சமூக நாவல் வரிசையில் ஒரு புதிய பார்வையை தோற்றுவிக்கத்தக்கனவாய் அமைந்தன. அதே போல் சம்மாந்துறையின் சிறுகதையாளர்களுள் எம்.எம்.நௌசாத், எம்.எம்.நௌபாத் ஆகிய இருவரும் முத்திரை பதித்தவர்கள். 1980, 90 களில் முன்னணி இலக்கியப் பத்திரிகைகளில் எழுதிய இவர்கள் மிகத்தரம்வாய்ந்த சிறுகதையாளர்களாய் கணிக்கப்பெற்றனர். அதே வேளை சம்மாந்துறையின் சிறுகதையாளர்களுள் சுபைதா அமீரும் பெயர்பெற்றவர். இவருடைய வானொலி நாடகங்கள் பல ஒலிபரப்பப்பட்டுள்ளன.

இதற்கப்பால் பல்துறையாற்றலுள்ள எழுத்தாளராய் விளங்கியவர்களுள் சம்மாந்துறையைச் சேர்ந்த வீ.ஆனந்தன் முக்கியமானவர் . ஆனந்தன் சம்மாந்துறையின் கலாபிவிருத்திக் கழகத்திற்குப் பிறகு இலக்கிய ஆளுமையை ஏற்படுத்திய ஒரு முக்கியமான தனி நபர். மன்சூர் ஏ.காதர் முதலானவர்களைக் கொண்டு அவர் இயக்கிய ‘வாசகர் வட்டம்’ அவரது பணிக்கு முக்கிய சான்று. ஆனந்தன் வாய் மொழி இலக்கிய மரபில் மிகுந்த ஈடுபாடுடையவர். அதில் ஆழமான ஆய்வுகளையும் மேற்கொண்ட ஒருவர். ஆனந்தன் மரணித்தபின்னரே “ஆனந்தன் கவிதைகள்” என்ற ஒரு தொகுப்பும் வெளிவந்தது. ஆனந்தன் மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்த சிறுகதைகள் தமிழுக்கு புது வரவைத் தந்தன. ஆனந்தனது இலக்கிய , சமூக , அரசியலை விளங்க அவர் அவ்வப்போது எழுதிய பத்தி எழுத்துக்களின் தொகுப்பும் மேடைப் பேச்சுக்களும் மிக முக்கியமானவையாகும். ஆகவே, ஆனந்தன் சம்மாந்துறையின் இலக்கிய சாதனையாளர்களுள் மிக முக்கியமானவரே .

இவ்வாறே எமது இலக்கிய பாரம்பரியத்தின் சாதனையாளர்களாக இன்னும் இருவரைக் குறிப்பிடமுடியும். ஒருவர், நல்ல கட்டுரையாளரான யூ.எல்.அலியார் அவர்கள் மிக நீண்டகாலமாய் இலக்கியம், கல்வி தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை அவ்வப்போது எழுதி வருகின்றார். இவரது பல கட்டுரைகள் சில நூல்களாய் வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது. மற்றவர், அபூ நஜாத் என்ற பெயரில் எழுதிய எம்.ஐ.எம்.பௌஸ்தீன் அவர்கள் இவர் பத்திரிகையாளராகவும், கவிஞராகவும் செயற்பட்ட போதும் உரைநடையாளர் என்ற வகையில் விதந்துகுறிப்பிடத்தக்கவர்.

தமிழகத்தின் பெருங்கவிஞர்களில் ஒருவரான வைரமுத்து எழுதிய ‘வடுகப்பட்டி முதல் வால்கா வரை’ என்ற தொகுதிக்கு எதிர்வினையாக ‘சம்மாந்துறை முதல் அஜர்பைஞான் வரை’ என்ற ஓர் உரை நடைத் தொகுதியை அபூநஜாத் வெளியிட்டார். இத் தொகுதி சமய, சமூக, அரசியல், மொழி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நூல் தனியாய் ஆய்வு செய்யப்படவேண்டிய ஒன்றாகும். அந்த வகையில் அபூநஜாதின் எழுத்துக்கள் தேசிய அளவில் கவனத்தை பெறத்தக்கனவாகும்.

மிகப்பெரும் பத்திரிகையாளர்களுள் ஒருவர் சம்மாந்துறையிலிருந்து பணியாற்றியிருக்கிறார். ஆக்கபூர்வமான பல முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். அப் பணிகளில் முக்கியமானது சம்மாந்துறையில் இருந்து அவர் வெளியிட்ட பத்திரிகைகளாகும் . இப் பத்திரிகை ஈழத்து முஸ்லிங்களின் புரட்சிகரமான குடும்ப ஏடாகவும், ஈழத்து முஸ்லிங்களின் புரட்சிகர ஏடாகவும் - தேசிய கலை இலக்கிய புரட்சி ஏடாகவும் வெளிவந்தது. பிற்காலத்தில் பிறைக்கவசம், கலைமுரசு முதலான பத்திரிகைகளையும், இப் பத்திரிகையாளரே வெளியிட்டுள்ளார். இந்தப் பணிகளின் சாதனையாளர் சம்மாந்துறையைச் சேர்ந்த ஆ.யு.ஆ.அமானுல்லாஹ் மௌவியாகும். “கலைத் தொண்டன்” என்ற பெயரிலேயே இவரது பத்திரிகைப் பணி அமைந்திருந்தது. முஸ்லிங்;களுக்கு என்று தனியான ஒரு பல்கலைக்கழகம், தனியான ஒரு கட்சி அமைய வேண்டும் என்ற கருத்துக்களை அக்காலத்திலே அவர் தனது பத்திரிகை, ஆசிரிய தலையங்கங்களில் எழுதியதாக அறியமுடிகிறது.

வெகுசனத்துறையின் மற்றொரு துறையான வானொலிக் கலைஞனாக செயற்பட்டார் மௌலவி யுஊயுஆ புஹாரி அவர்கள் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக ‘வரலாற்றில் ஓர் ஏடு’ நிகழ்ச்சியை இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் அள்ளி வழங்கி வந்தார். இவரது கம்பீரமான குரல் என்றும் நாடெங்கிலும் சம்மாந்துறையை அக்காலத்தில் பறைசாற்றி வந்தது.

இத்தகைய தமிழ்மொழியிலான பணிகளுக்கப்பால் சம்மாந்துறையின் சாதனையாளர்கள் பற்றிக் குறிப்பிடும்போது அரபு மொழி இலக்கிய பணிகள் பற்றியும் குறிப்பிடவேண்டியுள்ளது. அந்த வகையில் ஒருவர் ‘சின்னாலிம்’ என அழைக்கப்படும் அப்துல் காதிர் ஆலிம் ஆவார். இவர், சில அரபு மொழிக் கவிதைகளையும் காவியமும் ஆற்றியதாய் அறியமுடிகிறது. மற்றவர் சம்மாந்துறையின் பெயரை இலங்கைத் தீவெங்கும் ஒலிக்கச் செய்த ழு.ஆ.பாஸி ஆலிம் ஆவார். இவர் நமக்கு மத்தியில் பாடப் புத்தகம் எழுதி சாதனைபடைத்தவர். குர்ஆனை ஓதுவதற்கான ஒரு பாடநூலாக தத்ரிஸ{ல் குர்ஆன் என்பதை பாட நூலாக எழுதினார். தஃலீமுல் அரபியா, தொழுகை ஷாபி, அஹ்காமுல் இஸ்லாம் முதலானவை இவரின் முக்கிய தொகுதிகளாகும்.

இக் கட்டுரை சம்மாந்துறையின் இலக்கிய சாதனையாளர்கள் பற்றிய ஒரு மிகச் சிறிய குறிப்பே. இந்த குறிப்புக்களினூடே இக் கட்டுரை மிக விரிவாக்கப்படவேண்டிய தொன்று. இந்த இலக்கிய விலாசத்தைப் பற்றி எழுதும்போது உச்சரிக்கப்பட்ட சில பெயர்கள் மாத்திரம் தமது விலாசத்துக்குரியன என்பதல்ல. வௌ;வேறு கோணத்தில் பார்க்கப்பட வேண்டிய இன்னும் பல மூத்தவர்களும், இளையவர்களும் நமக்கிடையே உள்ளனர். நமது விலாசம் மிக அகன்றதும், ஆழமானதும். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாகவும் , ஆழமாகவும் முத்திரை குத்தப்படவேண்டியது.

றமீஸ் அப்துல்லாஹ்
சிரேஷ்ட விரிவுரையாளர்

பின்னிணைப்பு

மேற்படி தொடரை ஒட்டியதாக இன்னும் பல விலாசங்கள் பல்வேறு தேடல்களில் இருந்து கிடைத்துள்ளன. அவற்றையும் பின்னிணைப்பாக இதனுள் இணைத்துள்ளோம்.

வைத்தியத்துறையில் பல்வேறு பரீட்சைச் சான்றிதழ்கள் பெற்ற ஈழக்குயில் இத்ரீஸ், கணக்காளராக இருந்து கொண்டு வைத்திய நூல்கள், கவிதைத் தொகுப்புக்கள் வெளியிட்டதோடு சஞ்சிகை வெளியீடுகளை, தனியாகவும், கூட்டாகவும் செய்துள்ளார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த மீராலெவ்வை ஆசிரியர் இடதுசாரிக் கொள்கை வசப்பட்டவராக இருந்தார். இவர் தமிழ் கவிதை நூல் வெளியிட்டுள்ளார். கம்பன் கழகத்தினரால் நடாத்தப்பட்ட பல கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்ற இளைஞர் றிஸ்வானுல் ஹக் தனது திறன்களைப் போட்டிகளோடேயே நிறுத்திக்கொண்டார் போல் தெரிகிறது. ஐ.எல். ஜலீல் அவர்கள் ஆய்வுத்துறை ஈடுபாடு கொண்டவர். அத்துறையில் நூலும், கட்டுரைகளும் எழுதியதோடு பத்திரிகையும் வெளியிட்டுள்ளார். சபீனத்துல் நுஹா கவிதை நூல் வெளியிட்டுள்ளார். சம்மாந்துறை வீரமுனையைச் சேர்ந்தவரான எஸ். வேலாயுதம் ஆசிரியர் அவர்கள் சோதிட நிபுணராகவும், சோதிட நூல், சமயநூல் வெளியீட்டாளராகவும் இருக்கிறார். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலர் நூல் வெளியீடுகள் செய்திருக்கின்றனர். எச்.எம்.அன்வர் அலி ஆசிரியர் தனது அரசியல் பாடத்துறையோடு ஒட்டிய நூல்களும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். அதேவேளை யுசுஆ.அஷ்ரஃப், இஸ்லாமிய வரலாறு தொடர்பான ஒரு முக்கியமான நூலையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எம்.ஏ.எம்.றூஹ{ல்லாஹ் மௌலவி, ஐ.எல் காதர் மிரா சாஹிபு மௌலவி, எம்பி.அலியார் மௌலவி (அலியார் ஹஸரத்) ஆகியவர்கள் சமய நூல்கள் எழுதியுள்ளனர்.

இவற்றைத் தொடர்ந்து:-

காவியனார் முகம்மது சரீபு - 1949
புலவர் உமர் சாஹிப் - 1949
கவிஞர் வைத்திய சிகா அருணாசலம் - 1919
கவின் மணி அழகு ரெத்தினம் - 1932
கவிஞர் சோம சுந்தரத் தேசிகர் - 1955
எஸ். முகம்மதலி (ஆங்கிலம்) - 1957
குழந்தைக் கவிஞர் அலி.எம். இஸ்மாயீல் - 1958
கவிஞர் வீ. நாகமணி - 1959
கவிஞர் ஆ.மு.அலி - 1962
கவிஞர் எஸ்.எல் இப்றாஹீம் - 1966
கவிஞர் மு.அ. சறூக் - 1967
கவிஞினி மும்தாஜ் பேகம் - 1968
கவிஞர் எஸ.;எச.;எம் முஸ்தபா - 1959
கவிஞர் எச்.எம் பாறூக் - 1970
எழுத்தாளர் எம். எல் ஹமீமா - 1970
கவிஞர் ஏ. முகம்மட் முஸ்தபா - 1973
கவிஞர் கே.எல் சலீம் - 1973
கவிஞர் இஸற். எம். மன்சூர் - 1986
கவிஞர் நஃபர் அலி - 1987
எழுத்தளர் இஸற்.எம்.றிஸ்வி - 1990
கவிஞினி எம்.ரி தஸ்லிமா - 1999
கவிஞர் ஏ.பி. முகம்மட் - 2000
எழுத்தாளர் எல்எம். அஸ்லம் - 2000
ஐ.எல். பரீட் - 1965
ஜாபிர் - 1970
எம்.ஏ.சீ.ஏ மக்கின் - 1965
எழுத்தாளர் யூ.எம்.முஸ்தபா - 1956
எழுத்தாளர் எம்.ஏ.றசீது - 1956
எழுத்தாளர் எஸ்.ஏ றாசீக் - 1959
எழுத்தாளர் எஸ்.எல்.ஏ சலாம் - 1963
எழுத்தாளர் எம்.எஸ்.எம் அப்துல் காதர் - 1968
எழுத்தாளர் எம்.ஐ.எம் ஹனீபா - 1976
எழுத்தாளர் அல் - ஆலீம் ஏ. மஹ்மூது லெவ்வை -
எழுத்தாளர் மௌலவி எம்ஐஎம் அபூபக்கர் - 1936
கலைஞர் ஏ.ஏ கரீம் - 1957
கலைஞர் எம்.ரி. ராசா - 1964
கலைஞர் எம் மீராலெவ்வை - 1964
எழுத்தாளர் பி. கனக நாயகம் -
எழுத்தாளர் ஏ. எல் மஹ்றூப் -
கலைஞர் நெயினா முகம்மத் -
கலைஞர் ஏ.ஜே.எம் ஹனீபா - 1987
கலைஞர் எஸ். எல் றியாஸ் - 1990
கலைஞர் எம்.சீ. அன்சார் - 2002
கலைஞர் எஸ்.எம். ஜஹாகான் - 2003
கலைஞா என்.எம். புவாட் - 2003
கலைஞர் யூ.எல்.எம். றியாஸ் - 2005
ஒலிபரப்பாளர் எஸ்யெம் ஹனீபா - 1975
அறிவிப்பாளர் யூனுஸ் கே றஹ்மான் - 1979
அறிவிப்பாளர் எஸ்யெம்மெம் ஜவாத் - 1996
அறிவிப்பாளர் ஏ முகம்மது - 2000
அறிவிப்பாளர் எஸ்எஸ்எம்; ஸறூக் - 2002
அறிவிப்பாளர் இர்ஷாட் ஏ காதர் - 1985
அறிவிப்பாளர் ஏஸீயெம் கலீலுர் றஹ்மான் - 1987

ஆகியவர்களின் பட்டியலோடு:-

எழுதுவதை, இடையில் நிறுத்திக்கொண்ட கவிதைகள் எழுதுவதில் ஆர்வமும், ஆற்றலும் மிககவர்கள் சிலர்காணப்படுகின்றனர் ( தகவல்கள் தெளிவில்லை)

கவிஞர் மகுமூது லெவ்வை ஆலீம்
கவிஞர் எஸ் அருளம்பலம்
கவிஞினி உம்மு செல்வம்
கவிஞினி மிஸறியா ஏ மஜீது
கவிஞர் எம்.எம். ஹசன் ( ஆங்கிலம்)
கவிஞர் கே கருணாகரன்
கவிஞர் எம்.ஐ.எம். ஹனீபா
கவிஞர் ஏ.எம்.எம். நிஸாம்
கவிஞர் எஸ்.எஸ்.பி. நாதன்
கவிஞர் எம்.எம். நஜிமூதீன்
கவிஞர் எம்.ரி. ஜமாலுதீன்
கவிஞினி சம்சுன்னிஸா
கவிஞர் ஐ.எல் பரீத்;

இங்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளவர்களில் கவிஞர்கள், கட்டுரையாளர்கள், நாடக கலைஞர்கள், வானொலிக் கலைஞர்கள், ஒலிபரப்பாளர்கள், தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் எனப் பலர் இருக்கின்றனர். அதேவேளை இவர்களுள் அநேகமானோர் பல்வேறு திறன்கள் உள்ள கலைஞர்களும் இருக்கின்றனர். அனைத்து விபரங்களும் துலக்குவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யவேண்டியுள்

No comments:

Post a Comment